மஹாபொல புலமைப்பரிசில் 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்

மஹாபொல புலமைப்பரிசில் 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வரவு – செலவுத் திட்டத்துக்கான வாசிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் எனவும் விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )