பாராளுமன்ற தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம்

பாராளுமன்ற தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம்

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தவிசாளர் குழாத்தின்உறுப்பினர்களிடையே (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் அரவிந்த செனரத் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், கிங்ஸ் நெல்சன், எம்.கே. எம். அஸ்லம், உபுல் கித்சிறி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோர் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்குவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )