இரத்தினபுரியில் முதலீட்டு வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் தொழில்முயற்சியாளர்களின் சந்திப்பு

இரத்தினபுரியில் முதலீட்டு வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் தொழில்முயற்சியாளர்களின் சந்திப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் கைத்தொழிலாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டு, அக்கறை செலுத்தும் சமூக செயற்பாட்டாளர்களின் சந்திப்பு அண்மையில் கைத்தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்டத்தின் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுதல், மாவட்டத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை அறிமகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யபட்டுள்ள இந்த தொழில் முயற்சியாளர்களின் சந்திப்பின் போது சுற்றுலா, ஏற்றுமதி, விவசாயம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, மாகாண சுற்றுலா அமைச்சு, ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் போன் ஏற்றுமதியினால் இரத்தினபுரி மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே. ஜீ. எஸ். நிஷாந்த வின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்ப இரத்தினபுரி மாவட்ட தொழில்நுட்ப அபிவிரத்திச் சபை மற்றும் மாவட்ட திட்டமிடல் பிரிவு, சுயதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஆகியவற்றின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், சுய தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் உட்பட பல்வேறு துறை சார் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இரத்தினபுரி மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )