யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட05 பேர் கைது                    கேரள கஞ்சா-ஐஸ் – பணம் -தொலைபேசிகள் கைப்ற்றப்பட்டன

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட05 பேர் கைது கேரள கஞ்சா-ஐஸ் – பணம் -தொலைபேசிகள் கைப்ற்றப்பட்டன

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு குழு தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காங்கேசன்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெள்ளிக்கிழமை (14) இந்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 01 கிலோ 51 கிராம் கேரள கஞ்சா , 20 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , போதைப்பொருள் வலையமைப்பை பேணியதாக சந்தேகிக்கப்படும் 04 கையடக்க தொலைபேசிகள், போதைப்பொருள் விற்றதன் மூலம் பெறப்பட்ட 15ஆயிரத்து 720 ரூபாய், போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )