
300 கிலோ ஹெராயின் – 100 கிலோ ஐஸ் – துப்பாக்கிகளுடன் கைப்பற்றபட்ட படகு தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீன்பிடி படகு மீட்கப்பட்டது.
குறித்த படகில் 300 கிலோ ஹெராயின், 100 கிலோ ஐஸ், T56 துப்பாக்கிகள் 02 மற்றும் 5 ரிவால்வர்கள் உள்ளிட்ட 15 போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

