
155 இலக்க பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
155 இலக்க பேருந்து சேவை கொழும்பில் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று (11) காலை 5.30 மணி முதல் 155 பேருந்து சேவை மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பேருந்து சேவை, சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

