
ஹார்முஸ் நீரிணையில் இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
சமீபத்திய சர்வதேச செய்திகளின்படி, ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் இன்று காலைதான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்திருந்தது.
அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கத் தவறியதே இதற்குக் காரணம் என ஈரான் தரப்பு கூறியிருந்தது.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிகள் அந்தப் பகுதியை விட்டுத் திரும்பிச் சென்றுள்ளதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
: உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தப் பகுதியை அபாய வலயமாக அறிவித்துள்ளதால், கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் 15 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், அமெரிக்காவின் சென்கொம் மற்றும் ஈரானின் புரட்சிகர காவற்படை ஆகியன இப்பகுதியைக் கண்காணித்து வருகின்றன.

