ஆசியாவின் செல்வந்தர் பட்டியலில் கௌதம் அதானிக்கு முதலிடம்

ஆசியாவின் செல்வந்தர் பட்டியலில் கௌதம் அதானிக்கு முதலிடம்

பல ஆண்டுகளாக ஆசியாவின் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 90.8 பில்லியன் டொலர்களாக உள்ள நிலையில் அவர் தற்போது 2வது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் அதானி மற்றும் அம்பானி ஆகிய இருவரும் முதல் 20 இடங்களுக்குள் உள்ளனர்,

அதானி – 19வது இடத்திலும் அம்பானி -20வது இடத்திலும் உள்ளார்.

உலக செல்வந்தர்களின் முதல் எட்டு இடங்களை அமெரிக்கர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

இலான் மஸ்க் -656 பில்லியன் டொலர்களுடன் முதலிடத்திலும்

லாரி பேஜ் – 286 பில்லியன் டொலர்களுடன் இரண்டாம் இடத்திலும்

ஜெஃப் பெசோஸ் – 269 பில்லியன் டொலர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

கௌதம் அதானியின் இந்த வளர்ச்சி, அவர் இலங்கையின் கொழும்பு துறைமுக மேற்கு முனையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்துள்ள பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )