
கொழும்பு 15இல் வசிக்கும் ஒருவர் 01 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கைது
மாதம்பிட்டிய மிஹிஜய செவன பகுதியில் 01 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 01 கிலோகிராம் 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 15இல் வசிக்கும் 28 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு சந்தேக நபராக கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக மாதம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
CATEGORIES Sri Lanka

