கேகாலை மற்றும் மாவனல்ல பகுதிகளில் உள்ள பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கேகாலை மற்றும் மாவனல்ல பகுதிகளில் உள்ள பரீட்சை நிலையங்களில் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கண்டி நகரைச் சூழ அமைந்துள்ள கேகாலை மற்றும் மாவனல்ல பகுதிகளில் உள்ள பரீட்சை நிலையங்களில்,உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் , அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்தார்.

தனியார் வாகனங்கள் மூலம் மாற்று வழிகளைப் பயன்படுத்தி பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ரயில் பாதையைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ள மாணவர்கள் மட்டுமே அருகிலுள்ள பரீட்சை நிலையத்தைப் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

பரீட்சை நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான வினாத்தாள்கள் மட்டுமே இருப்பதால், முடிந்தவரையில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் ஜகத் ஹேரத் கேட்டுக்கொண்டார்.

எனவே, சிரமம் ஏற்பட்டால் மட்டுமே, அருகிலுள்ள வேறு பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாறை விழுந்து அனனர்த்தத்திற்குள்ளான இடம் குறித்த தொழில்நுட்ப அறிக்கை பெறப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி , அந்த இடம் இன்னும் பாதுகாப்பற்ற தன்மையுடன் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கீழே சரிந்ததைப் போன்ற ஒரு பாறைப் பகுதி இன்னும் மேலே இருப்பதாகவும், மழையுடனான காலநிலையால் அது வீதியில் விழும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆபத்து சரி செய்யப்படும் வரை வீதி திறக்கப்படாது என்றும் கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )