
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கோட்டை நீதவான் இன்று (03.) பிடியாணை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் வழக்கானது, ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் தொடரப்பட்டதாகும்.

