
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்களாதேஷின் உதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பங்களாதேஷ் அரசாங்கம் மற்றும் மக்கள் அன்பளிப்பாக வழங்கிய நிவாரண உதவி பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களுக்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (04) இடம் பெற்றது.
கடற்படை தலைமையகத்தினால் ஒன்பது தொன் எடையுடைய இந்த உதவி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் துசாரி தென்னகோனுக்குப் பதிலாக பிரதம கணக்காளர் பி. ஏ டி தமயந்தி மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் லெப்டினன் கேர்னல் நிஷாந்த பண்டாரவினால் கையளிக்கப்பட்டது.
மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள், நிவாரண சேவைகளுக்காக பயன் படுத்தப்படும் பாதுகாப்பு சப்பாத்து, தலைக்கவசம், கையுரை, கூடரம், கூட்பட பல பொருட்கள் இந்தப் பொருட்களில் உள்ளடங்கியுள்ளது.
அன்பளிப்புச் செய்யப்பட்ட மருந்துகளில் சுகாதாரப் பிரிவிற்கு கையளிக்கப்பட்டது. இதில் முதலாவது உலர் உணவுத் தொகுதி வீதித் தடை காரணமாக மந்தாரம் நுவர முகாமிற்காக இடை வீதிகளில் செல்லக் கூடிய சைக்கிள் குழுவினால் எடுத்துச் செல்லப்பட்டது.

