முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம்மோட்டார் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம்மோட்டார் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப், சபுகஸ்கந்த பகுதியில், மோட்டார் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்றிரவு 7.45அளவில் சபுகஸ்கந்த தெனிமல்ல பகுதியில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் அசோக ரன்வலவின் ஜீப் மோதிய காரில் பயணித்த 6 மாதக் குழந்தையான ஒரு பெண்ணும், அவரது 55 வயது பெண்ணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த நிலையில் ,பெண்
கிரிபத்கொட வைத்தியசாலையிலும் , சிறு குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

25 வயதுடைய, பெண் ஒருவரே குறித்த காரை ஒட்டிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அசோக ரன்வலவும் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு வழிவிட முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப், மோட்டார் வாகனம்,கார் ஆகியவை பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன,

விபத்து குறித்து சபுகஸ்கந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )