
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் அயல் வீட்டுக்காரர் மீது கத்தி குத்துயாழில் சம்பவம்
அயல் வீட்டுக்காரரை பெண்ணொருவர் கத்தியால் குத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு நெஞ்சில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
CATEGORIES Sri Lanka

