டி20 உலகக் கோப்பை ; வங்கதேச அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை ; வங்கதேச அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் திகதி முதல் மார்ச் 8-ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட வங்கதேச அணி விவரம் வருமாறு:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, ஷயிப் உதின், ஷோரிபுல் இஸ்லாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )