
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (06) காலை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதுளை நீதவான் உதித் குணதிலக்க, குறித்த வழக்கை மே மாதம் 5 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

