
நேற்று 11 பேருடன் காணாமல் போனஇந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன
11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் பாகங்களை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மலை புலுசருன் பகுதியில் இந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும் விமானத்தில் பயணித்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவிடப்படவில்லை .
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சிறகு சொந்தமானது என கோரப்பட்டுள்ளது..
ATR 42-500 என்ற இந்த விமானம் நேற்றுபுறப்பட்ட சிறிது நேரத்தில் இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகில் காணாமல் போனது, விமானத்தில் 11 பேர் பயணித்துள்ளனர்.

