பௌத்த மதத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை

பௌத்த மதத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,

“விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில், விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும். நாம் வழங்கும் தங்க நகைகள் அனைத்தும் விகாரைகளுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ சொந்தமானவையே. அவற்றில் கைவைக்க முயன்றால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது,” என தெரிவித்தார்.

மேலும், “1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )