அதிகாரம் கிடைத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளை திசைகாட்டி நிறைவேற்ற தவறிவிட்டது

அதிகாரம் கிடைத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளை திசைகாட்டி நிறைவேற்ற தவறிவிட்டது

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கும், பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையையும் ஜே.வி.பி தலைமையிலான இந்த திசைகாட்டி மக்களிடம் பொய்களைச் சொல்லி இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்றன.

இருந்த போதிலும், பெற்ற இரண்டு ஆணைகளுக்கும் தமது நியாயத்தை சரியாக செய்யவில்லை. தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது.

இவ்வாறு இருந்து கொண்டு இவர்கள் இப்போது கிராமத்தினதும் நகரத்தினதும் அதிகாரத்தைக் கோரி நிற்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று நாம் கேள்வி எழுப்பிப் பார்க்க வேண்டும்.

சம்பிரதாய அரசியலும் ஆட்சியும் பொருத்தமற்றது என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று சம்பிரதாய அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். எனவே, மீண்டும் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதா இல்லையா என்பது குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுப நேரத்தில் மக்கள் நாட்டை அநுரவிடம் ஒப்படைத்து, வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் எதிர்பார்த்தாலும், மக்கள் எதிர்பார்த்த வளமான நாடும் அழகான வாழ்க்கையையும் இன்னும் உருவாக்கப்படவில்லை.

இந்த யதார்த்தத்தை நாம் மனப்பூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டில் பொய், ஏமாற்று, மோசடி மற்றும் அச்சம் மேலோங்கி நிற்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்ளூர் அதிகார சபை தேர்தல்கள் 2025 நிமித்தம் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் (03) இரவு மத்திய கொழும்பு கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உச்சம் தொட்டுள்ள பொருட்களின் விலைகளை ஆட்சிக்கு வந்ததன் பிறகு குறைப்பதாகச் சொன்னார்கள்.

அரிசி மற்றும் தேங்காய், பால் மா ஆகியவற்றின் விலைகளை குறைப்போம் என வாக்குறுதி வழங்கியிருந்தனர். தமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்திலயே 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும், இன்று அந்த வாக்குறுதியையும் மீறியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )