7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் நேற்று (20) நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பயணித்த இரண்டு மீன்பிடி படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )