நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு

நாட்டில் குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் பதிவு

இன்று (23) அதிகாலை நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பண்டாரவளை பகுதியில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளதுடன், பதுளை பகுதியில் 14.8 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதேச தரவு சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை பெறுமதிகள், வரைபடம் ஒன்றின் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )