கிராமிய அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவதில் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகம் தனித்துவமானது

கிராமிய அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவதில் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகம் தனித்துவமானது

சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக சக்தி தேசிய செயற்பாடு, தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த திட்டங்களை முன்னோக்கி செயல்படுத்த புதிய டிஜிட்டல் கட்டமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பணியாற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு சமூக சக்தி தேசிய வேலைத்திட்டம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நேற்று (24) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் வறுமையை ஒழிப்பதற்கான முக்கியமான அபிவிருத்தித் திட்டம் சமூக சக்தி தேசிய செயற்பாடு என்று, இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கிராமிய அபிவிருத்திக்காக சுமார் 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதிகளைப் பயன்படுத்துவதில் கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்ட சமூக அபிவிருத்தி சபைகளுக்கு தனித்துவமான வகிபாகம் உள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்தப் பணிகள் அனைத்தையும் அதிகபட்ச செயல்திறனுடனும், வினைத்திறனுடனும் செயல்படுத்துவதில் பிரதேச செயலகப் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்களுக்கு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காணுதல், அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் அந்த அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றை சமூக

அபிவிருத்தி சபைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார இதன்போது தெரிவித்தார்.

அதன் கீழ் நிறுவப்பட்ட சமூக அபிவிருத்தி சபைகள் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், முழு சமூகத்தினதும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கும் வகையில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதன் அவசியத்தையும், திட்டங்களை எவ்வாறு துல்லியமாகக் கண்டறிந்து விஞ்ஞான அடிப்படையில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்தும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அந்த செயல்முறையை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப விடயங்கள் குறித்தும் அவர் இங்கு விரிவாக கலந்துரையாடினார்.

அரச சேவை மூலம் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்து, நேர்மையை உறுதி செய்வது, ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அதற்கான அரச அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலையும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான ரங்க திசாநாயக்க இங்கு வலியுறுத்தினார்.

சமூக சக்தி தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு உள்ள பொறுப்புகள் மற்றும் வகிபாகங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் சோமசிறி ஏகநாயக்க இதன்போது விளக்கமளித்தார்.

திட்ட முகாமைத்துவம் மற்றும் சமூக சக்தி வேலைத்திட்டத்தின் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து சிரேஷ்ட உதவிச் செயலாளர் சரதாஞ்சலி மனோகரன் அறிமுகம் செய்து வைத்தார்.

சமூக சக்தி தேசிய செயற்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளில் மேலும் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல் மன்றமும் இங்கு நடைபெற்றது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் மேலதிக செயலாளர் மேனக ஹேரத், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நளின் வனசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஹான் ஜயதிலக, நிதி ஆணைக்குழுவின் செயலாளர்

ஏ.டி.எம்.யு.டி.பி. தென்னகோன், தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தர்ஷனீ டி சில்வா, தேசிய வரவுசெலவுத்திட்ட திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இருதினி வீரகோன் மற்றும் சமூக சக்தி செயலகத்தின் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )