பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு ; இருவர் கைது

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு ; இருவர் கைது

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர், அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டின்சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய நபர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )