
முன்னாள் அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க சிஐடியில் வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (02) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
வாக்குமூலம் அளித்த பின் வெளியேறிய சமல் ராஜபக்ஷ, ஊடகங்களிடம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இதேவேளை, பிரசன்ன ரணதுங்க, தன்னிடம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

