
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : பல குழந்தைகள் உயிரிழப்பு
ஒக்டோபரில் அமுலுக்கு வந்ததாக கூறப்படும் “இடைநிறுத்து ஒப்பந்தம்” நடைமுறையில் இருக்கும் நிலையிலும், காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 11 வயதுடைய சிறுமி உட்பட பல குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவியவருகிறது
காசா நகரின் டூஃபா (Tuffah ) மற்றும் சைதூன் (Zaytun) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் அருகே கிசான் அபூ ரஷ்வான் பகுதியில் அகதிகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அல் மவாசி கடற்கரை பகுதியில் அமைந்திருந்த கூடார முகாமில் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அவசர உதவிப் பணியில் ஈடுபட்டிருந்த ஹுசைன் ஹசன் ஹுசைன் அல் சுமைரி என பாலஸ்தீன் செம்மஞ்சள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காசாவில் “Yellow Line” என அழைக்கப்படும் இஸ்ரேல் கட்டுப்பாட்டு எல்லையை இஸ்ரேல் மாற்றி வருவதாகவும், இதனால் கிழக்கு காசா மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

