
மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞன் கைது
மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நடத்துனரை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில், நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞனை, பேருந்து நடத்துனர் கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து நடத்துனருக்கும் மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது முறுகல் நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞன் நடத்துனரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அவதானித்த பேருந்தில் இருந்த பயணிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், இளைஞனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதீபன்

