
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடத்தையும் வரவிருக்கும் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கும் ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
www.parliament.lk எனும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள், அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே; எனும் முகவரிக்கு, பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.

