
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களை விடுதலை செய்ய திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.
கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாதங்களை பரிசீலித்த மேல் நீதிமன்றம், குறித்த நபர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

