தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கி சூடு : தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கி சூடு : தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைத்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், பாடசாலையின் தலைமை ஆசிரியை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தின் ஹாட் யாய் நகரத்திற்கு அருகிலுள்ள அமைத்துள்ள பாதோங் பிரதான் கீரிவாட் (Phatong Prathan Keeriwat)
பாடசாலைக்குள் புகுந்து நேற்றைய தினம் 18 வயது இளைஞன் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில், பாடசாலையின் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இன்று காலை பாடசாலையின் தலைமை ஆசிரியை
சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த மாணவிக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் துப்பாக்கிதாரி கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )