தேசபந்து தென்னகோன் IGP நியமனம் தொடர்பான மனு விசாரணை நிறைவு

தேசபந்து தென்னகோன் IGP நியமனம் தொடர்பான மனு விசாரணை நிறைவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஐஜிபி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணையை இன்று (12) முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடையதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்திருந்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையிலும், மனுதாரரின் ஒப்புதலுடனும் மனுவின் விசாரணையை நிறைவு செய்ய நீதிமன்றம் முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மனு, தலைமை நீதிபதி பிரிதி பத்மன் சூரசேன தலைமையில், நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )