
யாழில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி உறவினர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி அவரது உறவினர்கள் இன்று (12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இறுதி நிகழ்வுகளுக்குப் பின்னர், உறவினர்கள் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வீதிக்கு வந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

“பொலிஸாரை கைது செய்”, “எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்”, “பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

