பொரளையில் பாடசாலை மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்

பொரளையில் பாடசாலை மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்

பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில் சுவரில் மோதியதன் விளைவாக சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த தருணத்தில் பாடசாலை மைதானத்தில் நின்றிருந்த மூன்று மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய பெக்கோ இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )