கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணினி அமைப்பு மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியவுடன் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )