தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் நேற்று நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

குறித்த கோளாறு அவசரமாகச் சீரமைக்கப்பட்டதன் பின்னர், கட்டம் கட்டமாக நீர் விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போது பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வழமையான விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

எனினும், சில உயர்நிலப் பகுதிகளில் நீர் அழுத்தம் குறைவாக இருக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )