புதிய வலுசக்தி கொள்கை ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும்

புதிய வலுசக்தி கொள்கை ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும்

புதிய வலுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், நுரைச்சோலை மின்நிலையத்திற்காக தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

மின்சார உற்பத்தி செலவுகள் முறையாக நிர்வகிக்கப்படாததன் விளைவாக கட்டண உயர்வுகள் தவிர்க்க முடியாததாக மாறிவருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நிலக்கரி கொள்முதல் தொடர்பான மோசடிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல வலியுறுத்தியுள்ளார்.

புதிய வலுசக்தி கொள்கையின் அமலாக்கம், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தரப்புகள் இதுகுறித்து தெளிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )