
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
அனுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் அளவு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
CATEGORIES Sri Lanka

