
இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டன
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேலும் போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இருநாடுகள் மீதும் தனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய டிரம்ப், குறிப்பாக இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

