கோடிக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று தொழிலதிபர்கள் கைது

கோடிக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று தொழிலதிபர்கள் கைது

ஒரு கோடியே 78லட்சத்து ஐம்பதினாயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ,விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்லா பகுதிகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் என கூறப்படுகிறது.

119,000 “பிளாட்டினம்” வகை சிகரெட்டுகள் கொண்ட 595 சிகரெட் அட்டைப்பெட்டிகளை சந்தேக நபர்களின் பயணப் பைகளிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

மூன்று நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் தலா ரூ.03 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )