கம்பஹா மாவட்டத்தில் விசேட போக்குவரத்து செயற்பாடு

கம்பஹா மாவட்டத்தில் விசேட போக்குவரத்து செயற்பாடு

வீதி விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (கம்பஹா) மற்றும் இலங்கை பொலிஸ் இணைந்து கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்து வாகனக் குறைபாடுகள் பரீட்சிக்கும் விசேட செயற்பாடு அண்மையில் (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி, கடவத்தை மற்றும் மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்கள், பெலும்மஹர, யக்கல, நிட்டம்புவ, கட்டான, ஜா எல, பல்லேவெல, வெயங்கொட, தொம்பே, களனி மற்றும் மினுவாங்கொட ஆகிய 12 இடங்களில் இந்த விசேட நடவடிக்கை நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

கம்பஹா மோட்டார் வாகன உதவி ஆணையர் கலன ஜெயானந்தா மற்றும் மோட்டார் வாகன தலைமை ஆய்வாளர் பிரதீப் சஞ்சீவ, அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் இலங்கை பொலிஸ் (மோட்டார் வாகனப் பிரிவு) ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )