
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
எல்லை விதிகளை மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக மன்னார் கடலில் ஒரு இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், அந்த படகில் இருந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மன்னாருக்கு தெற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த படகு கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அது கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகும் கைது செய்யப்பட்ட மீனவர் குழுவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக டிக்கோவிட்ட மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

