100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; ஐவர் காயம்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; ஐவர் காயம்

நோர்ட்டன் பிரிட்ஜ் – லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்சபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காரை செலுத்தியவர் வாகனம் ஓட்டும் போது உறங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )