
நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் – ட்ரம்ப்
இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
இது தொடசிர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதியாக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும்.
போரை நிறுத்த நான் முயற்சிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்.
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமரும் இறந்திருப்பார்.
எனது நிர்வாகம் 9ஆவது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர், அன்றைய தினத்தில் நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பணயக்கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். ” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

