களுத்துறையில் சிற்றுண்டிச்சாலையை உடைத்து சாக்லேட் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கைது

களுத்துறையில் சிற்றுண்டிச்சாலையை உடைத்து சாக்லேட் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கைது

களுத்துறை வெர்னாட் பெர்னாண்டோ (Vernat Fernando) விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான இனிப்புகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் உள்ள பிரபல சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் உள்ள CCTV காணொளிகளைப் ஆய்வு செய்ததன் மூலம் சிறுமிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் (Toffees), சொக்லேட்டுகள், லாலிபாப்கள் , சூயிங்கம் மற்றும் பெப்பர்மிண்ட் போன்ற பெருமளவிலான பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )