
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி முற்றுகை : 09 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று நேற்று இரவு சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, அந்த விபச்சார விடுதியை நிர்வகித்ததாக சந்தேகிக்கப்படும் ஜா-எல பகுதியைச் சேர்ந்த58 வயதுடைய ஒருவரும்,25 முதல் 41 வயதுக்குட்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 9 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட அனைவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
TAGS ColomboCrime Investigationfronting brothelHot NewsJa-ElaKollupitiya Police DivisionMassage centreSri lankaThai women

