
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பெண் பாதுகாப்பாக மீட்பு
மாத்தறை – மிரிஸ்ஸ கடலில் நேற்று (26) நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்போது கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொடவில பொலிஸ் உயிர் காப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் ஈடுபட்டு, குறித்த பெண்ணை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டது.
மீட்கப்பட்டவர் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடலில் நீராடும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

