
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் இன்று (27) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 1.35 கோடி என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 27 வயது நபர், மற்றவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டார்.
பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86,800 வெளிநாட்டு சிகரெட்டுகள், 434 சிகரெட் கார்டூன்கள் மற்றும் 30 மின்னணு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

