50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் கைதுப்பாக்கிகளுடன் நால்வர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் கைதுப்பாக்கிகளுடன் நால்வர் கைது

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் இது குறித்து தெரிவிக்கையில்:

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேக நபர்களிடமிருந்து 13 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்களிடம் இருந்து 9mm வகை கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 30 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )