பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை

பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பாரிஸின் 14ஆவது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது ‘ஃபூர்னில் டிடோ’ (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.

இந்த வெற்றிக்காக அவருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 13 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பாண் வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )