
எரிபொருள் வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள் திடீரெனத் தீப்பற்றியது – யாழ்ப்பாணத்தில் சம்பவம்
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனத் தீப்பற்றியுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளுக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்டதன் பின்னரே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

