இந்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துங்கள்

இந்த நபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துங்கள்

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற வழக்கில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அறுகம்பே பகுதியில் கடந்த 25 ஆம் திகதி வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சந்தேக நபரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் , பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு 063 2248022 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அல்லது பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071 8591168 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )